சூர்யாவின் ஹிட் படத்தை மிஸ் பண்ணிட்டேன்.. சோனியா அகர்வால் வருத்தம்
நடிகை சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதற்கு பிறகு 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
2006ல் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த சோனியா அகர்வால் 4 வருடங்களில் அவரை பிரிந்துவிட்டார். திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திய அவர் மீண்டும் விவாகரத்துக்கு பிறகு நடிக்க தொடங்கி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சமீபத்தில் சோனியா அகர்வால் அளித்த பேட்டியில் தான் சூர்யாவின் ஒரு முக்கிய படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக கூறி இருக்கிறார். கஜினி படம் தான் அது.
அந்த படத்தில் அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்த ரோலுக்கான சான்ஸ் தனக்கு வந்தது என சோனியா அகர்வால் கூறவில்லை.



பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
