அட காதல் கொண்டேன் திவ்யா வா இது...அதே அழகுடன் மீண்டும் அவதாரம் எடுத்திருக்கும் சோனியா அகர்வால்!
தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால்.
தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மலையாளம் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு பிரபல இயக்குனர் செல்வராகவனை காதல் திருமணம் செய்துக்கொண்டு பின் கருத்துவேறுபாடால் பிரிந்தார்.
திருமணத்திற்கு பின் படவாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இப்போது சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் சோனியா அகர்வால் 25 வயது பெண் போல காதல் கொண்டேன் போன்ற படங்களில் தோன்றியது போலவே ஸ்லிம் அண்ட் பிட்டாக மாறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் சோனியா அகர்வால்.
இவரின் இந்த நியூ லுக் தன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
