உயிருக்கு போராடியவரை கையால் தூக்கி சென்ற நடிகர் சோனு சூட்! வைரல் வீடியோ
பாலிவுட் நடிகர் சோனு சூட் தென்னிந்திய சினிமாவில் எக்கச்சக்க படங்களில் வில்லனாக நடித்து பிரபலமாக இருப்பவர். கொரோனா காலகட்டத்தில் அவர் மக்களுக்கு செய்த உதவி பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. தற்போதும் அவர் தேவை இருக்கும் மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில் சோனு சூட் பஞ்சாபின் மோகா மாவட்டத்தை காரில் கடந்து சென்ற போது அந்த பகுதியில் ஒரு கார் விபத்து ஏற்பட்டு ஒரு நபர் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், சோனு வேகமாக சென்று அந்த நபரை கையால் தூக்கி சென்று தன் காரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கும் நிலையில் சோனு சூட்டை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Every Life Counts ?@SonuSood pic.twitter.com/veu5M6fcqU
— Sood Charity Foundation (@SoodFoundation) February 9, 2022