சூரரை போற்று இந்தி ரீமேக்கில் நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகர்.. நடிகரை மாற்றிய படக்குழு

suriya soorarai potru hindi remake
By Kathick Aug 05, 2021 06:40 PM GMT
Report

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப்போற்று.

சுதா கொங்கரா இயக்கிய இப்படம், ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக்கையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை சூர்யா, அபண்டன்ஷியா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

இதன்முலம் பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளராக சூர்யா அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் டாப் ஹீரோவான அக்ஷய் குமார் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியானது.

ஆனால் அவர், இந்த படத்தில் நடிக்க ரூ. 30 கோடி சம்பளம் கேட்டதால், படக்குழு ஷாகிப் கபூரை ஹீரோவாக நடிக்க வைப்பது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US