அடுத்தடுத்து இணையவுள்ள சூரரை போற்று திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் காம்போ!
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.
நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
குறிப்பாக இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் ஹிட்டானது.
இந்நிலையில் தற்போது பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்பின் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். அடுத்தடுத்து சூர்யா படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.