ஆஸ்கர் விருதின் இறுதி கட்டத்தில் இடம்பெறாமல் போன சூரரை போற்று படம் - ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்
ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரை போற்று.
சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இப்படம் வெளியானது.
உலகளவில் பல பாராட்டுகளை குவித்து இப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது.
இதனால் இப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் அறிவித்த இறுதி பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை.
இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள் Manithan
லண்டனில் இருந்து சரக்கு விமானத்தில் ரகசியமாக வெளியேற்றப்பட்ட அமெரிக்க தூதர்: அவரின் பின்னணி News Lankasri