யாரும் அறிந்திராத சூரியின் சினிமா பயணம்.. அவரே கூறிய ரகசியம்
சூரி
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விடுதலை. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது 20 - ம் தேதி வெளியாக உள்ளது.
சினிமா பயணம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சூரி அவரது கடந்த காலம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், " மாதம் ரூ. 1,500 வாடகையில் வாழ்ந்து வந்த எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் 'வெண்ணிலா கபடி குழு’.
அந்த படத்தில் வரும் 'பரோட்டா’ காமெடி கொடுத்த அடையாளம் தான் என் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளும் தைரியத்தை கொடுத்தது. ஆனால் உண்மையில் எனக்கு பரோட்டா பிடிக்காது.
மேலும் சினிமாவில் ஒரு நடிகனாக என்னை உயர்த்தியது. சினிமாவுக்காக சென்னை வந்தேன், பல படங்களில் செட் போடும் ஆளாக வேலை பார்த்திருக்கிறேன்.
நான் பார்க்காத வேலையே இல்லை. சீரியலில் ஒருவரி வசனத்தை கூட பேசியுள்ளேன். எனக்கு வாழ்க்கை கொடுத்ததாக வெண்ணிலா கபடி குழு படம் அமைந்தது" என்று கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
