ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டம்.. விடாமுயற்சியால் ஜெயித்தது பற்றி நடிகர் சூரி உருக்கம்
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்பு தேடி வந்த காலத்தில் பசியில் ரோட்டில் படுத்து கிடந்தது, ஒரு ஆபிசில் பசியால் மயங்கி விழுந்தது பற்றி எல்லாம் தற்போது பேசி இருக்கிறார்.
அஜித்தின் ஜி படத்தில் நடித்தபோது அடிபட்டுவிட்டது, அதை பார்த்துவிட்டு அஜித் 'எந்த ஊர்?' என கேட்டார். மதுரை என சொன்னது, 'மதுரை காரங்க எல்லாருமே ஏன் இவ்ளோ fire ஆ இருக்காங்க' என அவர் கேட்டார்.
பெயிண்டர் வேலை செய்தபோது நாங்கள் எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஓனர் வருகிறார், எல்லோரும் எழுந்து ஓரமாக போங்க என சொல்லி சாப்பாடு இலையை இழுத்து ஓரமாக விட்டுவிட்டார்கள்.

வெண்ணிலா கபடி குழு படம் ரிலீஸ் ஆன பிறகு ஒரு ஜவுளி கடைக்கு துணி எடுக்க போகிறோம். அப்போது கூட்டம் அதிகமாக வந்து என்னிடம் போட்டோ/ஆட்டோகிராப் எல்லாம் கேட்கிறார்கள். அதனால் அந்த கடை மேனேஜர் வந்து என்னை MD ரூமில் அமர சொல்கிறார். உங்களுக்கு துணி அங்கே வரும், அங்கேயே பார்த்து எடுத்துக்கொள்ளலாம் என கூறினார்.
பெயிண்டர் வேலை செய்தபோது சாப்பாடு இலையை இழுத்து ஓரமாக விட்ட அதே கடை தான் அது. அந்த ஓனரின் ரூமிலேயே அப்போது இருக்க சொன்னார்கள்.
ஆபிஸ்
"என் ஆபிசுக்காக ஒரு பில்டிங் பார்க்க சொன்னேன், அப்போது ஒரு ஆபிஸ் பார்த்து ஒரு தொகை கூறினார்கள். அதற்கு சொன்ன தொகைக்கு வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டேன். அதன் பிறகு என் மனைவி அதற்கு சண்டை போட்டார்."
"உங்களை ஏமாளி என சொல்கிறார்கள், அந்த ஆபிஸ் அவ்வளவு விலை எல்லாம் போகாது என சொன்னார். ஆனாலும் நான் அந்த ஆபிஸை வாங்கி பால்காய்ச்சிவிட்டேன். அதன் பிறகும் மனைவி சண்டை போட்டார்."

"அந்த பில்டிங்கிற்காக நான் எந்த விலை வேண்டுமானாலும் கொடுப்பேன் என கூறினேன். நான் வாய்ப்பு தேடியகாலத்தில் பசியால் மயங்கி விழுந்துவிட்டேன், அப்போது 1.5 ருபாய் டீ வாங்கி கொடுத்து அனுப்பினார்கள். அந்த பில்டிங் தான் அது. தற்போது என் ஆபிஸ் அங்கே தான் இருக்கிறது" என சூரி கூறினார்.
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri