மிரட்டலான இயக்குநருடன் இணைந்த சூரி.. கைகோர்த்த பிரபல நடிகை! அறிவிப்பு இதோ
சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, பின் மாஸ் கதாநாயகனாக மாறியுள்ளார் சூரி.
வெண்ணிலா கபடி குழு எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, விடுதலை திரைப்படம் ஹீரோவாக அவரை மாற்றியுள்ளது.
அதன்பின் அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டகாளி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது வருகிற 20ஆம் தேதி வெளிவரவிருக்கும் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
புதிய கூட்டணி
இந்த நிலையில், சூரி அடுத்ததாக ஹீரோவாக நடிக்கவிருக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விலங்கு வெப் தொடர் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்.
இவர் தான் சூரியின் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'மாமன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.