முடிவுக்கு வந்த சூரி - விஷ்ணு விஷால் சண்டை! ஒன்றாக வெளியிட்ட போட்டோ
நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த போதிருந்தே நண்பர்களாக இருந்து வந்தனர். அந்த படத்தில் வரும் பரோட்டா காமெடி தான் சூரியை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
விஷ்ணு விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது அந்த படம். அதற்கு பிறகு ஹீரோவாக ஏராளமான படங்களில் விஷ்ணு விஷால் நடித்த நிலையில் சூரி அதில் பலவற்றில் சூரி காமெடியனாக நடித்தார்.
குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உட்பட பல படங்களில் இந்த கூட்டணி நடித்து இருக்கிறது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வரும் புஷ்பா புருஷன் காமெடியும் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
சண்டைக்கு பின் சமரசம்
இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இடையே ஒரு பெரிய சிக்கல் வெடித்தது. நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் அப்பா 2.7 கோடி ருபாய் வாங்கி ஏமாற்றிவிட்டார் என சூரி புகார் அளித்தார்.
நீண்ட காலமாக இருந்த இந்த பிரச்சனையில் தற்போது தீர்வு கிடைத்து இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு மூன்றாவது நபர் தான் காரணம் என தெரியவந்ததால் சூரி சமரசம் அடைந்து இருக்கிறார்.
தற்போது விஷ்ணு விஷால் மற்றும் அவர் அப்பா இருவரும் சூரி உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
"நடப்பவை எல்லாம் நன்மைக்கே" என சூரி பதில் அளித்து இருக்கிறார்.
நடப்பவை எல்லாம் நன்மைக்கே
— Actor Soori (@sooriofficial) April 9, 2024
நன்றிங்க @TheVishnuVishal
❤️? https://t.co/kAVUfqrBhj

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
