கோலாகலமாக நடந்த ரோபோ ஷங்கர் மகள் திருமணம்- வெயிட்டான மொய் எழுதிய நடிகர் சூரி

By Yathrika Mar 25, 2024 05:00 AM GMT
Report

ரோபோ ஷங்கர்

விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்துள்ள நடிகர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ ஷங்கர்.

இவரது மகள் இந்திரஜா ஷங்கர், விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.

அதன்பிறகு அடுத்தடுத்து இந்திரஜா சில படங்கள் நடித்து வந்தார்.

கோலாகலமாக நடந்த ரோபோ ஷங்கர் மகள் திருமணம்- வெயிட்டான மொய் எழுதிய நடிகர் சூரி | Soori Costly Gift To Indraja Shankar Marriage

திருமணம்

கடந்த சில மாதங்களாகவே ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா திருமண கொண்டாட்டம் நடந்து வருகிறது. பல கோடி செலவில் தனது மகளின் திருமண விழாவை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார் ரோபோ ஷங்கர்.

இந்திரஜா தனது தாய்மாமன் கார்த்திக் என்பவரை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமண ரிசப்ஷன் மார்ச் 23, நடந்தது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் நடிகர் சூரியும் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகர் யார் என்று தெரிகிறதா?- அட இவர்தானா?

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகர் யார் என்று தெரிகிறதா?- அட இவர்தானா?

மணமக்களுக்கு அறிவுரைகள் கூறிய சூரி, மேடைக்கு வந்ததுமே கவரில் பணக்கட்டுடன் மொய் வைத்திருக்கிறார்.

அதை வாங்கிய ரோபோ சங்கர் ரொம்ப வெயிட்டா இருக்கே என ரியாக்ட் செய்தது அங்கிருந்த பிரபலங்களையும் சொந்தக்காரர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.  

கோலாகலமாக நடந்த ரோபோ ஷங்கர் மகள் திருமணம்- வெயிட்டான மொய் எழுதிய நடிகர் சூரி | Soori Costly Gift To Indraja Shankar Marriage

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US