நடிக்க வரும் முன் சூரி பணத்திற்காக செய்த வேலை! பலருக்கும் தெரியாத தகவல்
நடிகர் சூரி தற்போது கோலிவுட்டில் முன்னணி காமெடியன்களில் ஒருவர். அவர் சினிமாவில் சேர்ந்த பணத்தை மதுரையில் ஹோட்டல் பிஸ்னஸில் முதலீடு செய்து நடத்தி வருகிறார். அவருக்கு பல ஹோட்டல்கள் தற்போது சொந்தமாக இருக்கிறது.
ஆனால் அவர் நடிக்க வரும் முன்பு சென்னைக்கு வந்து என்ன வேலை செய்தார் தெரியுமா? அவர் டிப்பர் லாரியில் கிளீனராக தான் முதலில் வேலை செய்து இருக்கிறார். அதில் வரும் சம்பளத்தை கொண்டு தான் உணவு, உடை என செலவுகளை கவனித்துக்கொண்டாராம்.
அந்த வேலை செய்துகொண்டே அவர் சினிமாவில் சான்ஸ் கேட்டு அலைந்திருக்கிறார். அதன் பிறகு வேலை கிடைத்து இருக்கிறது. ஆர்ட் டிபார்ட்மெண்டில் அவர் வேலை செய்ய தொடங்கி இருக்கிறார்.
படிப்படியாக இயக்குனர்கள், துணை இயக்குநர்கள் என நடிக்க சான்ஸ் கேட்டு அப்படியே படிப்படியாக நடிகராக உள்ளே வந்திருக்கிறார் சூரி. இந்த தகவல் சில வருடங்களுக்கு முன்பே சூரியே ஒரு பேட்டியில் சொன்னது தான்.