சூரிக்கு இந்த வாய்ப்பை நான் தான் வாங்கி கொடுத்தேன்.. ஓப்பனாக கூறிய நடிகர்
சிங்கம்புலி
இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்து, ரெட், மாயாவி போன்ற படங்களை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் சிங்கம்புலி. இவர் பல படங்களுக்கு வசனமும் எழுதி இருக்கிறார்.
இருப்பினும் சிங்கம்புலி காமெடி நடிகராக தான் மக்கள் மனதில் பெரிய அளவில் பிரபலம் ஆனார். 'பாயசம் எங்கடா' என்ற அவரது காமெடி தற்போதும் மீம்களாக இணையத்தில் உலா வருகிறது.
சிங்கம்புலி கடந்த ஆண்டு வெளியான மகாராஜா படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார். அது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதற்கு அவர் ஏன் என்ற விளக்கமும் கொடுத்திருந்தார்.
அதுமட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட 'டாப் குக்கு டூப் குக்கு' என்ற ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.
சிங்கம்புலி ஓபன்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகர் சூரி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "சுந்தர் சி இயக்கிய 'கண்ணன் வருவான்' என்ற படத்தில் நான் தான் அசிஸ்டண்ட் இயக்குனர்.
அப்போது அங்கு சூரி டெக்னீசியனாக வேலை பார்க்க வந்தார். நான் தான் சூரி குறித்து கவுண்டமணியிடம் கூறினேன். தற்போது, பெரிய நடிகர் ஆன பின்பும் அதை பற்றி பல இடங்களில் கூறி வருகிறார். அதை கண்டு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
