லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி.. இது செம மாஸ் கூட்டணியா இருக்கே
சூரி
நகைச்சுவை நடிகராக இருந்து இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஸ்வரூபன் எடுத்துள்ளார் சூரி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாமன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து சூரி நடிப்பில் தற்போது மண்டாடி எனும் படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், சூரி ஹீரோவாக நடிக்கப்போகும் அடுத்த புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ் கூட்டணி
அதன்படி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இப்படத்தை இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கப்போவதாக தகவல் கூறுகின்றனர்.

லிஜோ ஜோஸ் இதற்குமுன் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லிஜோ ஜோஸ்- சூரி - லோகேஷ் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan