முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் சூரியின் மாமன்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
மாமன் படம்
நடிகர் சூரி, துணை கதாபாத்திரம், காமெடி இப்போது நாயகனாக கலக்கிவரும் ஒரு பிரபலம்.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதை எழுதி ஹீரோவாக நடித்துள்ள படம் மாமன்.
கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியான இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இவர்களுடன் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தான் மாமனுக்கும், 6 வயது மருமகனுக்கும் இடையிலான உறவை உணர்வுபூர்வமாக குடும்பங்கள் கொண்டாடும் விதமாக இப்படம் அமைந்தது.
தொலைக்காட்சி
ரூ. 40 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் இந்த வருடத்தில் வெற்றிப் பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
தற்போது என்ன தகவல் என்றால், தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பாக உள்ளதாம். ஜீ தமிழில் விரைவில் படம் ஒளிபரப்பாக உள்ளதாக புரொமோக்கள் வெளியாகியுள்ளன.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri