ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள்.. விமர்சித்தவருக்கு நடிகர் சூரி கொடுத்த பதிலடி
நடிகர் சூரி ட்விட்டரில் எப்போதும் வெளிப்படையாக பேசக்கூடியவர். மற்ற நடிகர்களை போல விமர்சனங்கள் கண்டதும் அதை பார்த்து அமைதியாகிவிடாமல், சூரி தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தும் வருகிறார்.
சூரியை 200 ரூபாய் கொத்தடிமை என ஒருவர் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட, அந்த நபருக்கு காட்டமாக பதிலடி கொடுத்து இருக்கிறார் அவர்.

பதிலடி
"தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்."
"ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது."
"இன்று சினிமாவில் Content தான் King. அதை தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல; அதை பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும்; இல்லன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை. "
இவ்வாறு சூரி பதிலடி கொடுத்து இருக்கிறார்.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan