நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி சூரி கூறிய தகவல்.. மிரண்டுபோன குடும்பம்! என்ன தெரியுமா?
நடிகர் சூரி
ஒரு காமெடியனாக அறிமுகமாகி பிறகு நடிகராக தமிழ் சினிமாவில் உயர்ந்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் இடம்பெறும் ஒரு காமெடி காட்சி மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளம்.. ஒரு வேளை தான் சாப்பாடு.. ஷாருக்கான் கூறிய அதிர்ச்சி தகவல் இதோ!
அதை தொடர்ந்து, களவாணி, தூங்கா நகரம், குள்ளநரி கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் காமெடி ரோலில் நடித்து பின்பு, கதாநாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பார்ட்- 1 என்ற படத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து கொண்டார்.
தற்போது விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூரி தன் நெருங்கிய நண்பர் மற்றும் நடிகரான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில், ஒரு பேட்டியில் சூரி தன் நண்பர் சிவகார்த்திகேயன் பற்றி பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் குறித்து பேசிய சூரி
அதில், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நான் சிவாவின் நண்பனாக நடித்திருப்பேன். அந்த படத்திற்கு பிறகு நிஜத்திலும் நாங்கள் அண்ணன் தம்பி போல இருக்கிறோம். இந்த நிலையில் என் தம்பி தயாரிக்கும் இந்த அற்புதமான படத்தில் நான் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என கூறியுள்ளார்.
மேலும், என் நடிப்பை பார்த்து விட்டு சிவா என்னை அழைத்தார். அப்போது "என்ன நடிப்பு இது அண்ணா, என் அம்மா, மனைவி அனைவரும் பார்த்து மிரண்டு விட்டனர். நீங்கள் ஒரு அருமையான நடிகர்" என்று பாராட்டியதாக சூரி கூறியுள்ளார்.