சூரியின் அடுத்த படம்.. சிவகார்த்திகேயன் பட இயக்குனர் உடன் கூட்டணி
நடிகர் சூரி காமெடியனாக இருந்து ஹீரோ ஆனவர். தொடர்ந்து ஹீரோவாக படங்கள் நடித்து குறிப்பிடத்தக்க படங்களை கொடுத்து வருகிறார் அவர்.
தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் 7வது படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

அயலான் இயக்குனர்
சிவகார்த்திகேயனின் அயலான் பட புகழ் இயக்குனர் ரவிக்குமார் உடன் தான் சூரி கூட்டணி சேர்ந்து இருக்கிறார். அயலான் படம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறாத படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ரவிக்குமாரின் முந்தைய படமான இன்று நேற்று நாளை படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று.
சூரி - ரவிகுமார் கூட்டணி சேரும் படத்தினை மைத்ரி நிறுவனம் தயாரிக்கிறது. Blood followed the flood என போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால் வெள்ளத்தை மையப்படுத்திய கதை இது என தெரிகிறது.