சூரி வீட்டு திருமணத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன்...
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி, இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதாவிற்கு இன்று மதுரையில் திருமணம் நடந்துள்ளது.
மணமக்கள் சுஷ்மிதா - ராம்பிரசாத் திருமணத்திற்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், புகழ், தங்கதுரை உள்பட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் நடிகர் சூரியின் குடும்பம் கூட்டு குடும்பமாக இருப்பதால் எந்த ஒரு விசேஷம் என்றாலும் சூரியின் தலைமையில் தான் நடந்து வரும்.
அதேபோல் சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதாவின் திருமணமும் அவரது தலைமையில் தான் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை சூரியை பிரமாண்டமாக நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.