சொர்க்கவாசல் திரைவிமர்சனம்

Report

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் Swipe Right Studios; Think Studios இணைந்து தயாரித்துள்ள சொர்க்கவாசல் படம் இன்று வெளிவந்துள்ளது.

சொர்க்கவாசல் திரைவிமர்சனம் | Sorgavaasal Movie Review

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. 

கதைக்களம்

மெட்ராஸ் மத்திய சிறையில் கைதியாக இருக்கும் செல்வராகவன், சிறைக்குள் இருந்து கொண்டே ஒட்டுமொத்த சென்னையையும் ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கிறார். கட்டபஞ்சயத்து, போதை மருந்து என பலவிதமான குற்றங்களையும் செய்து வருகிறார்.

சொர்க்கவாசல் திரைவிமர்சனம் | Sorgavaasal Movie Review

செல்வராகவனின் சாம்ராஜ்யத்தின் கதை ஒரு பக்கம் நகர, மற்றொரு புறம் ஆர்.ஜே. பாலாஜியின் கதை துவங்குகிறது. கையேந்தி பவன் வைத்து நடத்தி வரும் ஆர்.ஜே. பாலாஜி, புதிதாக ஹோட்டல் திறக்க வேண்டும், தான் காதலிக்கும் பெண்ணை கரம் பிடிக்க வேண்டும், அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கனவுகளுடன் இருக்கிறார்.

சொர்க்கவாசல் திரைவிமர்சனம் | Sorgavaasal Movie Review

இந்த சமயத்தில் திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்ட பாலாஜி, செல்வராகவன் இருக்கும் சென்னைக்கு சிறைக்கு கொண்டு வரப்படுகிறார். தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி ஏன் கைது செய்யப்பட்டார். இதற்கும் செல்வராகவனுக்கு என்ன சம்பந்தம்? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. 

படத்தை பற்றிய அலசல்

மெட்ராஸ் மத்திய சிறையில் 1999ல் நடந்த கலவரத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்.

எடுத்துக்கொண்ட கதைக்களம், அதை விறுவிறுப்பான ஆக்ஷன் நிறைந்த திரைக்கதையில் கொண்டு வந்த விதம் என படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். எந்த இடத்திலும் தொய்வு இல்லை. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது.

சொர்க்கவாசல் திரைவிமர்சனம் | Sorgavaasal Movie Review

இதுவரை நகைச்சுவை நாயகனாக மட்டுமே நடித்து நம்மை பொழுதுபோக்க செய்த ஆர்.ஜே. பாலாஜி, முதல் முறையாக தனது மறுபக்கம் நடிப்பையும் இப்படத்தில் வெளிக்காட்டியுள்ளார். சிறையில் அவர் படும் கஷ்டங்கள், சொல்லமுடியாத துன்புறுத்தல்கள், பயம், கோபம் என அனைத்து இடங்களிலும் அவர் நடித்து விதம் அருமையாக இருந்தது.

சிறையில் இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடக்கிறதா என வடசென்னை படத்தை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும். அதே போல் சொர்க்கவாசல் படத்திலும் பல ஆச்சரியங்களை வைத்துள்ளார் இயக்குனர் சித்தார்த்.

சொர்க்கவாசல் திரைவிமர்சனம் | Sorgavaasal Movie Review

சிறைக்கு வெளியில் தான் அரசியல் இருக்கிறது என்றால், சிறைக்கு உள்ளே கூட பதிவுக்காக அரசியல் நடக்கிறது என்பதையும் எடுத்து காட்டியுள்ளார்.

திடீரென கைது செய்யப்பட்ட பாலாஜி, சிறைக்குள் வரும் பொழுது எப்படி இருந்தார், இந்த சிறை அவரை எப்படி மாற்றியது, இதனால் அவர் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்னென்ன, இறுதியில் அவருடைய எண்ணம் மாறிய விதம் என அந்த கதாபாத்திரத்தின் ஆர்க் ரசிக்கும்படியாக இருந்தது.  

6 வருடத்தை எட்டிய நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படம்... மொத்த வசூல் விவரம்

6 வருடத்தை எட்டிய நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படம்... மொத்த வசூல் விவரம்

செல்வராகவன், சானியா அய்யப்பன், நட்டி நட்ராஜ், ஷரஃப் யு தீன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட அனைவரின் நடிப்பு பக்கா. பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சிகளுக்கும் மிரட்டலான பின்னணி இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, டெக்கனிகள் விஷயங்கள் சிறப்பு.

சொர்க்கவாசல் திரைவிமர்சனம் | Sorgavaasal Movie Review

ஆனால், இப்படம் திரில்லர் ஆடியன்ஸை தவிர, அனைவருக்கும் கனெக்ட் ஆகுமா என்பது தெரியவில்லை. அதுவே இப்படத்தின் மைனஸாக அமைந்துள்ளது. 

பிளஸ் பாயிண்ட்

ஆர். ஜே. பாலாஜி, மற்ற அனைவரின் நடிப்பு

சித்தார்த் இயக்கம் மற்றும் திரைக்கதை

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு

பின்னணி இசை

மைனஸ் பாயிண்ட்

அனைவருக்கும் இப்படம் கனெக்ட் ஆகுமா என்பதே படத்தின் மைனஸ் பாயிண்ட்

மொத்தத்தில் சொர்க்கவாசல் எதிர்பார்க்காத நேரத்தில் திறக்கும், அதை பயன்படுத்தினால் வரம், இல்லையென்றால் அது சாபம்.. 

சொர்க்கவாசல் திரைவிமர்சனம் | Sorgavaasal Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US