முத்துக்குமரன் கூறிய கருத்துக்கு சௌந்தர்யா பதிலடி... பிக்பாஸ் 8 பிரபலங்களின் சண்டை
பிக்பாஸ் 8
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியோடு கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8.
விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்க நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்து பார்த்தனர். இந்த நிகழ்ச்சி முத்துக்குமரனை வெற்றியாளராக்கி முடிவுக்கும் வந்தது.
பிக்பாஸ் முடிந்த கையோடு அவரவர் அவர்களின் வேலைகளை கவனித்து வருகிறார்கள்.
சண்டை
முத்துக்குமரனிடம் ஒரு பேட்டியில், சௌந்தர்யா பற்றிய உங்களது நிலைப்பாடு வீட்டில் இருந்த போது ஒன்றாகவும், வெளியே வந்தபோது ஒன்றாகவும் உள்ளதே என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், என்னுடைய கருத்துப்படி சௌந்தர்யா பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாத ஆள்தான், ஆனால் என்னுடைய கருத்து வெகுஜன மக்களின் கருத்தோடு வேறுபாடு இருந்தது.
அவர் அந்த விளையாட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு, அதனால் தான் ஒவ்வொரு முறையும் செளந்தர்யாவை நாமினேட் செய்தேன், என்னுடைய கருத்து இது என்றார்.
இதற்கு சௌந்தர்யா, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து நான் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் சிலர் என்னை நாமினேட் செய்துகொண்டே இருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
சௌந்தர்யா பதிவு முத்துக்குமரனின் பேட்டிக்கு சூசகமாக பதில் கூறும் வகையில் உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu

குழந்தையின் டயப்பர், சிந்திய சிறுநீர் பை; விமானத்தில் அருவருப்பு விஷயம் - பணிப்பெண் ஆதங்கம் IBC Tamilnadu
