அண்ணாத்த படம் பார்த்து கண்கலங்கி ரஜினியின் மகள் சவுந்தர்யா.. மீண்டும் இணையுமா இந்த கூட்டணி
சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த இப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.
சமீபத்தில் இப்படத்தை தனது பேரன்களுடன் சமீபத்தில் பார்த்தார் ரஜினிகாந்த். அது பற்றியும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை பார்த்த பிறகு மீண்டும் ரஜினிகாந்த், சிவா இணைய் வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, "அண்ணாத்த படத்துல நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு மக்கள் இன்னும் பார்க்கலை சிவா சார், ஆனா, நான் பார்த்துட்டேன்.
படம் பார்த்துட்டு நான் வெளிய வந்து, உங்க கைய பிடிச்சிக்கிட்டு கண்ணுல தண்ணியோட நீங்க பண்ணது மேஜிக் இல்லை, அதுக்கு என்ன சொல்லணும்னே தெரியலை.
தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாவும், அப்பாவோட மகளாவும் நீங்க அப்பாவை பார்த்துக்கிட்ட முறைய வச்சி, கண்ணடிப்பா, நீங்க, அப்பா, உங்க மொத்த குழு 'அண்ணாத்த' படத்துக்கப்புறம் திரும்பவும் வேலை பார்க்கணும் சார் " என கேட்டுக் கொண்டுள்ளார்.