விமான விபத்திற்கு முன் மறைந்த நடிகை சௌந்தர்யா பேசியது என்ன தெரியுமா?
சௌந்தர்யா
தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கும்படி நிறைய நாயகிகள் உள்ளனர்.
அப்படி வசீகரிக்கும் அழகால் மக்களை கட்டிப்போட்டவர் தான் நடிகை சௌந்தர்யா. தமிழில் 1993ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பொன்னுமணி திரைப்படம் பெரிய வரவேற்பை கொடுத்தது.

அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் என கொடிகட்டி பறந்தார். ரஜினி, கமல்,விஜயகாந்த் என முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்தவர் தயாரிப்பாளராகவும் கலக்கினார்.
தவசி, சொக்கத்தங்கம், அருணாச்சலம், படையப்பா போன்ற படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படங்களை கண்டாம். புகழின் உச்சத்தில் இருந்த போதே அரசியலில் என்ட்ரி கொடுத்தார். அரசியல் வேலைகளுக்காக விமானத்தில் பயணித்தவர் விமான விபத்தில் உயிரிழந்தார்.

கடைசி பேச்சு
தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்புவதற்கு முன் தன்னிடம் போதுமான காட்டன் புடவைகள் இல்லை என்று தனது அண்ணி மகளிடம் கூறியுள்ளார்.
பிரச்சாரத்திற்காக புதிய காட்டன் புடவைகள் வாங்க வேண்டும் என்றும் குங்குமம் வாங்கி வரச் சொல்லியும் கேட்டிருக்கிறார். இந்த விஷயத்தை பேசிவிட்டு அரசியல் பயணம் சென்றவர் கொடூர விபத்தில் தனது உயிரை இழந்தார்.