தமிழில் மீண்டும் அனிமேஷன் படமா?.. சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்னது என்ன?
சௌந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் என்ற அடையாளத்தோடு நுழைந்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். பின் தன் உழைப்பால் முன்னேறி தற்போது திரைப்பட இயக்குநர், கிராபிக் டிசைனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். பின் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்தை இயக்கி இருந்தார்.

சொன்னது என்ன?
இந்நிலையில், தமிழில் மீண்டும் ஒரு அனிமேஷன் படம் எடுக்கப்படுமா? தமிழில் முருகனின் ‘சூரசம்ஹாரம்' குறித்து ஒரு அனிமேஷன் படம் எடுத்தால் என்ன?' நிச்சயம் அது வெற்றி பெரும் என்று ரசிகர் ஒருவர் சௌந்தர்யாவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நீங்கள் கூறுவது மிகவும் உண்மை, அனிமேஷனுக்கு அதற்கான அங்கீகாரம் இறுதியாகக் கிடைத்துவிட்டது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று நான் உறுதியாக நம்புகிறேன். இறையருளால், இன்னும் பல அற்புதமான படங்கள் வர உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
