படையப்பா 2 குறித்து சூப்பர் தகவல் கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த்... என்ன விஷயம்
படையப்பா
தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவே முடியாத ஒரு திரைப்படம் படையப்பா.
கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியான இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன், பிரகாஷ் ராஜ், நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தார்கள்.
கதை செம மாஸ் என்றால் பாடல்கள் அதையும் விட செம பக்கா மாஸாக அமைந்தது. இதனால் படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. கடந்த வருடம் ரஜினியின் 75வது பிறத்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலீஸ் ஆகி இருந்தது.

2ம் பாகம்
ரீ-ரிலீஸ் ஆன போது ரஜினி இத்தனை வருடங்களாக மறைத்து வைத்து ஒரு விஷயத்தை கூறியிருந்தார். அதாவது இந்த கதையை எழுதியது ரஜினிகாந்த் தானாம், தற்போது அவர் 2ம் பாகத்திற்கான கதையை கூட தயாராக்கிவிட்டாராம்.
அந்த கதையும் சூப்பராக வந்துள்ளது, ஆனால் யார் அந்த கதையை இயக்குவார், எப்போது உருவாகும் என எதுவும் இப்போதைக்கு உறுதியாகவில்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
