பிரபல டாப் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட்ட ரஜினியின் மகள்.. யாருடன் தெரியுமா
ரஜினி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் இயக்குனர்களாக இருக்கிறார்கள்.

இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சௌந்தர்யா
அடுத்ததாக ரஜினியின் இளைய மகளும் புதிதாக படத்தை இயக்கப்போகிறாராம். இப்படத்திலும் ரஜினிகாந்த் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதற்கு முன் சிவகாசி, சண்டைக்கோழி போன்ற திரைப்படங்களில் Graphic designer ஆக பணியாற்றியுள்ளார். கோச்சடையான் படத்தை தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தையும் சௌதர்யா இயக்கினார்.
இந்த நடிகருடன் நடிக்க வேண்டும்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சௌந்தர்யா ரஜினிகாந்திடம் 'நீங்கள் எந்த ஹீரோவுடன் இணைந்து நடிக்க விரும்புவீர்கள்' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சௌந்தர்யா 'அஜித் சாறுடன் இணைந்து நடிப்பேன்' என கூறினார். பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டியில் சௌந்தர்யா கூறிய விஷயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri