அப்பாவின் ஆசிர்வாதத்தால் தொடங்கியது.. சௌந்தர்யா ரஜினிகாந்த் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?
சௌந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் என்ற அடையாளத்தோடு நுழைந்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
பின் தன் உழைப்பால் முன்னேறி தற்போது திரைப்பட இயக்குநர், கிராபிக் டிசைனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
பின் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்தை இயக்கி இருந்தார்.
காரணம் என்ன?
தற்போது இவர் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த அபிஷன் ஜீவிந்தை ஹீரோவாக்கி உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வெறும் 35 நாட்களில் நிறைவடைந்துள்ளன.
தற்போது ரஜினிகாந்த் தொடங்கி வைத்த இந்த படப்பிடிப்பு முடிவடைந்த சந்தோஷத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் அவரது இன்ஸ்டா பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். இதோ,

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
