கிரிக்கெட் ஜாம்பவான் வாழ்க்கையை படமாக்கும் ரஜினி மகள் சௌந்தர்யா! ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த லால் சலாம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
அடுத்து ரஜினி தான் நடித்து வரும் வேட்டையன் பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். அவரை சமீபத்தில் சஜித் நதியத்வாலா என்ற ஹிந்தி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சந்தித்து பேசி இருந்தார். ரஜினி உடன் கூட்டணி சேர்ந்து இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.

சௌந்தர்யா இயக்கும் படம்
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக சஜித் நதியத்வாலா தயாரிக்க இருக்கிறார் என்றும், அந்த படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க போகிறார் என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது.
கங்குலியாக ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்க போகிறாராம். இந்த படம் பற்றி பேச தான் சஜித் நதியத்வாலா சமீபத்தில் சென்னைக்கு வந்து ரஜினியை சந்தித்துவிட்டு சென்று இருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
நாம் தமிழர் நிர்வாகி கார்த்திகா கைது; தவெக அரசுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu