தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணமாக இருந்தாரா ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா.. பெரும் சர்ச்சை
தனுஷ் இயக்கும் மூன்றாவது படம்
நடிகர் தனுஷ் பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் தன்னுடைய இரண்டாவது இயக்கத்தில் வெளியாகும் தனது 50வது திரைப்படத்தின் வேலைகளை முடித்துள்ளார்.
இந்நிலையில் இதை தொடர்ந்து அவர் இயக்கப்போகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைபடத்தில் தனுஷின் உறவினர் பவிஷ் நடிகராக அறிமுகம் ஆகிறார். மேலும் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை முதன் முதலில் இயக்கவிருந்தது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் தான்.
ஆம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனுஷின் திரைக்கதை மற்றும் வசனத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்குவதாக இருந்தார். இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசிய பேட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதில் தனுஷ் திரைக்கதை, வசனத்தில் நான் இயக்கவிருந்த படம் தான் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தை ஆரம்பித்த கட்டத்தில் சரியாக நடிகர், நடிகைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை, அதனால் படத்தை ட்ராப் செய்துவிட்டோம்' என கூறியுள்ளார்.
பிரிவுக்கு காரணம் இதுதானா
சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படியொரு காரணம் கூறியுள்ள நிலையில், மற்றொரு தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் - சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக இணைந்து பணிபுரிந்து வந்த நிலையில், தனுஷ் மற்றும் சௌந்தர்யா இருவரும் இணைந்து பணிபுரிய கூடாது என தனுஷிடம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாகவும், இதனால் தான் தனுஷுக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் இடையே முதல் சண்டை ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இவர்களுடைய பிரிவிற்கு இதுதான் ஆரம்ப புள்ளியாக இருந்ததாகவும் பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
