தனது பேரனுக்காக ரஜினி நேரில் சென்று செய்த செயல்.. போட்டோ ஷேர் செய்த சௌந்தர்யா, செம வைரல்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த், இந்திய சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்.
72 வயதாகும் இவர் இப்போதும் ஆக்டீவாக படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார், இவரது நடிப்பில் அடுத்து வேட்டையன் திரைப்படம் உருவாகியுள்ளது.
ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேலுடன் ரஜினி கூட்டணி அமைத்திருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்றைய சம்பவம்
ரஜினி அவர்களின் படப்பிடிப்பு தகவல்களுக்கு இடையே இன்று நடந்த சம்பவத்தின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதாவது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் மகன் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்துள்ளார். அவரை சமாதானம் செய்து நடிகர் ரஜினியே தனது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சௌந்தர்யா இன்ஸ்டாவில் ஷேர் செய்ய போட்டோஸ் வைரலாகி வருகிறது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
