இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை
சரிகமப சீசன் 5
ஜீ தமிழில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோ சரிகமப சீசன் 5.
உலகில் உள்ள திறமையான பாடகர்களை தேர்வு செய்து மேடையில் பாட வைத்து அழகு பார்த்து வருகிறது ஜீ தமிழ் சரிகமப மேடை. கடந்த மே மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சரிகமப சீசன் 5 நேற்று (நவம்பர் 23) வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.
இந்த 5வது சீசனின் டைட்டிலை சுவாந்திகா வெற்றிப்பெற்று ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீட்டை தட்டிச்சென்றார்.

சபேசன்
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற நாடு விட்டு நாடு வந்து, உறவினர்கள் இல்லாமல் தனியாக பாட்டு பாடி தமிழக மக்களை கவர்ந்து வந்தவர் தான் சபேசன்.
இலங்கையில் இருந்து பாட வந்தவர் சரிகமப 5வது சீசனில் முதல் ரன்னர் அப் ஆக தேர்வாகியுள்ளார், ரூ. 10 லட்சம் பணப்பரிசும் பெற்றுள்ளார்.

இதனை தாண்டி பாடகர் எஸ்.பி.சரண், சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விஷயத்தை செய்து கொடுத்துள்ளார். அது என்னவென்றால் சபேசன் Band உருவாக்கி கொடுத்துள்ளார், அவரது முதல் ஷோவிற்கும் நான் வருவேன் என கூறியுள்ளார்.

மேடையில் சபேசனுக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.