50வது நாளில் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கப்போகும் முன்னாள் போட்டியாளர்.. கசிந்த தகவல்
பிக்பாஸ் 8
பிக்பாஸ், முதல் சீசன் கொடுத்த பிரம்மாண்ட வரவேற்பு இப்போது 8வது சீசன் வரை வந்துள்ளது.
7 சீசன்களை தொடர்ந்து தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த 8வது சீசனை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதில் அந்த இடத்தில் இப்போது விஜய் சேதுபதி உள்ளார், அவரது ஸ்டைலில் நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார்.
பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்டது.
50வது நாள்
தற்போது பிக்பாஸ் 50வது நாளை எட்டவுள்ள நிலையிவ் ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.
அதாவது பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கப்பட்ட நாளில் இருந்து கொஞ்சம் பரபரப்பு குறைந்த வண்ணமே இருந்த நிலையில் திடீரென வைல்ட் கார்ட்டு என்ட்ரி என பலரை உள்ளே அனுப்பினார்கள்.
ஆனாலும் நிகழ்ச்சி சூடு பிடித்ததாக தெரியவில்லை. எனவே 50வது நாளில் இந்த சீசனில் வெளியேறிய ஒருவரை மீண்டும் உள்ளே அனுப்ப பிக்பாஸ் குழு யோசித்து வருகிறார்களாம்.
அதன்படி அர்னவ் மீண்டும் பிக்பாஸ் 8வது சீசன் வீட்டிற்கு நுழைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
You May Like This Video