ஸ்பைடர்-மேன் பாக்ஸ் ஆபிஸ்: இந்தியாவில் 12 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம்
ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் 12 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே
2026-ஆம் ஆண்டு ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே. கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியான இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

உலகளவில் செய்துள்ள வசூல்
ஒவ்வொரு நாளும் பாக்ஸ் ஆபிஸில் ஸ்பைடர்-மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகளவில் 12 நாட்களில் இப்படம் 1.7 பில்லியனுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் 2 பில்லியனை தாண்டி மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பாக்ஸ் ஆபிஸ்
உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம், இந்தியாவில் முதல் நாளிலிருந்தே வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில், 12 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 520 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்கிற சாதனையை ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
