டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'.. சென்சேஷனல் வசூல்
'பிராண்ட் நியூ டே'
உலக புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் அடுத்த பாகமான 'பிராண்ட் நியூ டே' என்கிற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது.

மார்வெல் யூனிவெர்ஸில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மார்வெல் தயாரிப்பில் வெளியான சாங்சி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் டாம் ஹாலண்ட், சென்டயா, சாடி சிங்க், மார்க் ரஃபல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
டிக்கெட் முன்பதிவு
இப்படி மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், டிக்கெட் முன்பதிவிலேயே வசூல் வேட்டையை தொடங்கிவிட்டது. இந்தியாவில் இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு இந்திய பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள சென்சேஷனல் முன்பதிவு வசூலாகும்.

இதன் மூலம், முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டுமே மாபெரும் வசூல் சாதனையை 'பிராண்ட் நியூ டே' படைக்கும் என்றும், இதற்கு முந்தைய திரைப்படமான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படத்தின் வசூல் சாதனையும் முறியடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu