'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' வசூல் வேட்டை.. இந்தியாவில் சென்சேஷனல் சாதனை
பிராண்ட் நியூ டே
உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளியானது.

இதற்கு முன் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் இடம்பிடித்து சாதனை படைத்தது. இதனால் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் கண்டிப்பாக டாப் 5-ல் இடம்பெரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சென்சேஷனல் வசூல்
அதன்படி, இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், 2 நாட்களில் இந்தியாவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' 2 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 140 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இது இப்படத்திற்கு இந்திய பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள சென்சேஷனல் வசூலாகும். இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri