4 நாட்களில் உலகளவில் ஸ்பைடர் மேன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும், ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
பிராண்ட் நியூ டே
ஸ்பைடர் மேன், ஸ்பைடர் மேன், ஸ்பைடர் மேன் - எங்கு திரும்பினாலும் இந்த வார்த்தை தான் சினிமா ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திரைக்கு வந்த ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்திற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தில் நடித்த டாம் ஹோலாண்ட், ஜென்டயா, சாடி சிங்க் மற்றும் இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் என அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வசூல்
இந்நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் 927 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 8800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் வெளியான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படம் 1.9 பில்லியன் டாலர் வசூல் செய்து, உலகளவில் அதிக வசூலித்த டாப் 10 திரைப்படங்களில் இடம்பிடித்து சாதனை படைத்தது. அந்த சாதனையை பிராண்ட் நியூ டே திரைப்படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.