டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே.. மாபெரும் வரவேற்பு
ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே
உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே.
இதற்கு முன் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களில் இடம்பிடித்து சாதனை படைத்தது.

இதனால் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் கண்டிப்பாக டாப் 5ல் இடம்பெரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் முன்பதிவிலேயே வசூலில் வேட்டையாடி வருகிறது ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே.
முன்பதிவு வசூல்
இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் முன்பதிவில் மட்டுமே இப்படம் ரூ. 30 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது.

கண்டிப்பாக முதல் நாள் இந்திய வசூல் என்பது மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.