உடல் முழுக்க காயம்.. வெளிவந்த பிரபாஸ், த்ரிப்தி டிம்ரியின் 'ஸ்பிரிட்' பட First லுக் போஸ்டர்
ஸ்பிரிட்
ரசிகர்களால் பான் இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக ராஜாசாப் படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்பிரிட். அனிமல் படத்திற்கு பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கி வருகிறார்.

இவர்கள் இருவரும் இப்படத்திற்காக முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை த்ரிப்தி டிம்ரி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் கொரியன் நடிகர் Ma Dong-seok இப்படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
First லுக்
இந்த நிலையில், இன்று புத்தாண்டு என்பதால் ஸ்பிரிட் திரைப்படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கம் போல் தனது ஸ்டைலில் வித்தியாசமான First லுக்கை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த First லுக்..
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு வெடிக்காத மோட்டார் குண்டுகள்: பொலிஸார் விசாரணை தீவிரம் News Lankasri
இந்தியாவின் மீதான வரி 50% இருந்து 25% ஆக குறைக்கப்படலாம்: அமெரிக்க நிதித்துறை அமைச்சர் தகவல் News Lankasri