Squid game ஒரு சிறப்பு பார்வை
உலகம் முழுவதும் தற்போது ஒரு கைக்குள் அடக்கிவிடலாம் என்பது நாளுக்கு நாள் சாத்தியமாகிறது, அந்த வகையில் உலக சினிமாக்கள் அனைத்தும் பல ஓடிடி தளங்கள் மூலம் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் பார்க்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
அந்த வகையில் கொரியன் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, கொரியன் சினிமா உலக அளவில் ஹாலிவுட் படங்களுக்கே கடும் சவாலை விட்டு வருகின்றது. அதற்கு உதாரணமாக பாரசைட் படம் வென்ற ஆஸ்கர் விருதுகளே சாட்சி, தற்போது வெப்சீரிஸுகளும், கொரியன் திரையுலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த விதத்தில் தற்போது இயக்குனர் Hwang Dong-hyuk இயக்கத்தில் Lee Jung-jae நடிப்பில் வெளிவந்துள்ளது Squid game வெப் சீரிஸ் தான் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றது. அது என்ன Squid game என்றால், நம்ம ஊரில் கண்ணாமூச்சி, திருடன் போலிஸ், கோலிக்குண்டு, பம்பரம் என சீசனுக்கு தகுந்தால் போல் விளையாடுவோம்.
அதில் எப்போதும் சந்தோஷம் மட்டுமே இருக்கும், அதிலும் இந்த விளையாட்டுக்களை விளையாடி நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு பல கோடி கிடைக்கும் என்றால் நமக்கு எப்படி இருக்கும், புரட்டாசி மாதம் முடிந்து பிரியாணி சாப்பிடும் பீல் தானே.
அவ்வளவு சந்தோஷம் இருக்கும், அதே நேரத்தில் தோற்றவர்களை நாங்கள் சுட்டு கொன்று விடுவோம் என்று ஒரு ரூல் இருந்தால், அட போங்கடா வேற வேலை இல்லையா என்று தலை தெறிக்க ஓடிவிடுவோம்.
அதேபோல் தான் இந்த Squid game சீரிஸும், ஒவ்வொருத்தரின் வறுமையையும் பயன்படுத்திக்கொண்டு, ஒரு மர்ம குரூப் இந்த சிறுப்பிள்ளை தனமாக விளையாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். தன் மகளுக்கு நல்ல அப்பாவாக இருக்க வேண்டும் நல்ல பணம் வேண்டும் அவளை வளர்ப்பதற்கு என ஹீரோ உள்ளே வர, இதே போல் பலருக்கும் பல காரணங்கள் உள்ளது இந்த விளையாட்டிற்குள் வர, இப்படி 450 பேருக்கு மேல் இந்த கேமில் வருகின்றனர், இதில் மொத்தம் 5 கேம், கடைசி கேமில் இருவர் மட்டும் தான் இருக்க வேண்டும்.
மற்ற எல்லோரும் இறக்க வேண்டும் இது தான் ரூல், இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை மனித உணர்ச்சிகள், அதன் போராட்டங்கள் என காட்சிக்கு காட்சி பரபரப்பு, நம்முடன் அத்தனை சந்தோஷமாக பேசி சிரித்தவரை அடுத்த நாள் தன் கையிலேயே கொல்ல வேண்டும் என்ற நிலை என பல கட்ட மனித உணர்ச்சி மற்றும் வர்க்க வேறுபாடு அரசியல்களையும் சிறுப்பிள்ளைத்தனமான விளையாட்டுக்கள் மூலம் இயக்குனர் காட்டி மிரட்டியுள்ளார்.
கண்டிப்பாக இந்த வருடத்தில் பெஸ்ட் வெப் சீரிஸ் என்றால் இதுவாக தான் இருக்கும், இதை படமாக எடுக்க 10 வருடத்திற்கு முன்பே இயக்குனர் பல ஸ்டுடியோக்களில் ஏறி இறங்கியுள்ளார்.
ஆனால், இதெல்லாம் ஒரு கதையா என்று தூக்கி போட, இன்று நெட்ப்ளிக்ஷில் வெளியான நாள் முதல் இன்று வரை முதலிடத்தில் இருக்கின்றது இந்த Squid game. கண்டிப்பாக பாருங்கள் உங்களுக்கு ஒரு பல கட்ட அனுபவங்களை அள்ளித்தரும் இந்த Squid game.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர் News Lankasri

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை... பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! IBC Tamilnadu
