SR.பிரபு சாரை கலங்கடிக்க வைத்த "கணம்".

kanam sr prabu
By Kathick Oct 22, 2021 06:45 PM GMT
Report

“என் தாயை மனதில் வைத்து திரைக்கதை அமைத்த கதையெய் எஸ்.ஆர்.பிரபு சாரிடம் சொன்னேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது…” Kanam director shreekarthik. Dream warrior Pictures சார்பில் SRபிரபு தயாரிக்கும் “கணம்”.

அம்மாவின் பாசத்தை வைத்து உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ! தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் SRபிரபு அவர்களின் Dream warrior Pictures விளங்கி வருகிறது.

“அருவி, என் ஜி கே, கைதி” இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம் பெரும் பாரட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது. 

இந்த திரைப்படம் உருவான விதமே ஒரு அழகு கதை!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டிக்கொண்டிருந்த ஶ்ரீகார்த்திக் Happy to be single எனும் வெப் சீரிஸை இயக்க அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, தனது சொந்த அனுபவங்களிலிருந்து ஒரு கதையை உருவாக்கி, தயாரிப்பாளர் SR பிரபுவை அணுகியுள்ளார். ஒரு சிறு பட்ஜெட் படமாக புதுமுகத்தை வைத்தே, இக்கதையை முதலில் சொல்லியுள்ளார் இயக்குநர்.  

“ எனது தாயார் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் இறந்து விட அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அந்த ‘கணம்’ உருவான கதை தான் இந்த “கணம்”. இந்த திரைக்கதையை தாய் மகன் உறவு, சயின்ஸ் பிக்சன் என பல தளங்களில் பயணிக்கும் வித்தியாசமான படைப்பாக இப்படம் உருவாக்கினேன். இதை ஒரு சிறிய படமாக உருவாக்க வேண்டும் என்றுதான் நான் நினைத்து, வித்தியாசமான் கதைகளை தயாரிக்கும் தயாரிப்பாளர் SR பிரபு விடம் சொன்னேன். கதையின் அடுத்தடுத்த நிமிடங்கள் பிரபுசாரை கலங்கடிக்க வைத்து விட்டது…” என்றார் டைரக்டர் ஶ்ரீகார்த்திக்.  

கதையும் அதன் உணர்வுகள் பயணிக்கும் விதத்தையும் கேட்டு வியந்த அவர் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் இதை பெரிய அளவில் உருவாக்குவோம் என்று, படத்தை பிரமாண்டமாக வடிவமைக்க தொடங்கினார். இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கலாம் என திட்டமிட்ட பிறகு தனது நண்பரான எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்தை அணுகி அவரை நாயகனாகவும் ஆக்கியுள்ளார். இப்படம் மூலம் சர்வானந்த் 10 வருடங்களுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.

படத்தின் மிக முக்கியமான அம்மா வேடத்தில், தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத கனவுக்கன்னியாக விளங்கிய அமலாவை நடிக்க வைத்துள்ளது படக்குழு. 25 வருடங்களாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை அமலா இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ரசிகர்கள் கொண்டாடும் பாத்திரமாக அவரது பாத்திரம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் தனது தாயின் நினைவாகவே இத்திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.
அமலா, சர்வானந்த் முதன்மை பாத்திரங்களாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்துள்ளார். சதீஷ் ரமேஷ் திலக் ஆகியோருடன் நாசர் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சுஜித் சாரங்கால் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாளுக்கு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் ஃபேமிலி டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US