திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் ஸ்ரீஜா கர்ப்பம்! வளைகாப்பு புகைப்படங்கள் பகிர்ந்த செந்தில்
செந்தில் - ஸ்ரீஜா
சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பாப்புலர் ஆனவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. அவர்கள் நிஜத்திலேயே காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். 2014ல் அவர்கள் திருமணம் நடந்தது.
அதற்கு பிறகும் விஜய் டிவியில மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்தனர். மேலும் 'கல்யாணம்: கண்டிஷன்ஸ் அப்ளை' என்ற வெப் சீரிசில் அவர்கள் இருவரும் மட்டும் நடித்தனர். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து மூன்று சீசன்கள் ஓடியது.
ஸ்ரீஜா கர்ப்பம்.. வளைகாப்பு
இந்நிலையில் திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீஜா கர்ப்பம் ஆகி இருக்கிறார். இன்று ஸ்ரீஜாவின் வளைகாப்பு விழா நடைபெற்று இருக்கிறது.
அதன் போட்டோக்களை செந்தில் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார். அவர்களுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.



இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
