இனி இவர் தான் சின்ராசு! பிரபல சீரியல் ஹீரோ தான்.. வானத்தைப்போல சீரியல் அப்டேட்
சன் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. அண்ணன் தங்கை சென்டிமென்டை பிழிந்து சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது அது. டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது.
இந்த தொடரில் தங்கை துளசியாக நடித்து வந்த நடிகை ஸ்வேதா திடீரென வெளியேறிய நிலையில் அவருக்கு பதில் மன்யா ஆனந்த் என்ற நடிகை தற்போது நடித்து வருகிறார். மேலும் அண்ணன் சின்ராசு ரோலில் நடித்து வந்த தமன் குமாரும் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி சீரியல் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது புது சின்ராசாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. a
ஸ்ரீகுமார் யாரடி நீ மோகினி சீரியல் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீ தமிழ் தொடர்களில் நடித்து வந்த அவர் தற்போது சன் டிவிக்கு தாவி இருப்பது அனைவருக்கும் சற்று ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி பிஜேபி ‘பி’ டீம் தான் - கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகி குமுறல் IBC Tamilnadu
