சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 - டைட்டில் ஜெயித்த ஸ்ரீநிதா! தோற்றவர்களுக்கும் காத்திருந்த பெரிய பரிசு
சூப்பர் சிங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 9ம் சீசனின் பைனல் இன்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது.
டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதற்கான பதில் கிடைத்துவிட்டது.
டைட்டில் ஜெயித்த ஸ்ரீநிதா
பலரும் எதிர்பார்த்தது போலவே ஸ்ரீநிதா தான் டைட்டில் ஜெயித்திருக்கிறார். அவருக்கு 60 லட்சம் ருபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
2ம் இடம் - ரன்னர் அப் - ஹர்ஷினி
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9ம் சீசனில் ஹர்ஷினி தான் ரன்னர் அப் என தமன் அறிவித்தார். அவருக்கு 10 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.
3ம் இடம் - அக்ஷரா
3ம் இடம் பிடித்த அக்ஷரா லக்ஷ்மிக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது.
தோற்றவர்களுக்கும் பரிசு
வின்னர் லிஸ்ட்டில் வராதவர்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் பரிசு தரப்பட்டது. பைனலுக்க் வந்து ஜெயிக்காதவர்களுக்கு தலா 3 லட்சம் ரூ. பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது.