ஸ்ரீசாந்த் அறிமுகமாகும் முதல் படத்திலே நயன்தாரா மற்றும் சமந்தா ! என்ன படம் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தவர் தான் ஸ்ரீசாந்த், இவர் தற்போது திரையுலகிற்கு நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் "இப்படி ஒரு நல்ல படம் மற்றும் குழுவுடன் நான் தமிழில் அறிமுகமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இப்படத்தில் நான் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
அது படத்தின் சர்ப்ரைஸ் கதாபாத்திரம் என்பதால், நான் இதை அதிகம் பேச விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.