6 வருடத்திற்கு பின் சினிமாவில் என்ட்ரி.. திருமணம் குறித்து பேசிய ஸ்ரீ திவ்யா..
ஸ்ரீ திவ்யா
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இதன்பின் ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி போன்ற படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அதன்பின் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. கடைசியாக தமிழில் 2017ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதன்பின் 6 ஆண்டுகள் கழித்து தற்போது விக்ரம் பிரபுவின் ரைடு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது.
வந்தந்திக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில், நடிகை ஸ்ரீ திவ்யாவிற்கு திருமணம் என வதந்தி பரவி வந்தது. ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் ஸ்ரீ திவ்யா.

"சமீபகாலமாக என்னுடைய திருமணம் குறித்த வதந்திகள் பரவி வருகிறது. நான் யாரையோ காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும், அதை நானே கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை" என கூறியுள்ளார் ஸ்ரீ திவ்யா.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan