அஜித் சாருக்கு ரொம்ப நன்றி கடன் பட்டுள்ளேன்.. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ஓபன் டாக்
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கார் ரேஸில் மிகவும் பிசியாக இருக்கிறார் அஜித். சமீபத்தில் கூட கார் ரேஸுக்காக மொட்டை அடித்து ஆளே மாறியிடுந்தார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தை இயக்கவேண்டும் என்பது பல இயக்குநர்களின் கனவாக இங்கு உள்ளது. அப்படி அஜித் இயக்க மிகப்பெரிய கனவுடன் காத்துக்கொண்டிருப்பவர்தான் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். இவர் 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் 3BHK. இப்படம் வருகிற ஜூலை 4ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் அஜித் உடன் இணைந்து பணிபுரிவது குறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசியுள்ளார்.
ஓபன் டாக்
"நான் அஜித் சாருக்கு ரொம்ப நன்றி கடன் பட்டுள்ளேன். அவரை இயக்க வேண்டும் என்றால் அதற்கான தகுதியை நான் வளர்த்து கொள்ள வேண்டும். இன்னும் சில சரியான படங்கள் எடுத்து விட்டு என்றாவது ஒருநாள் அஜித் சாருடன் படம் எடுக்க முடிந்தால் அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்" என கூறியுள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
