அது இல்லாமல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியால் இருக்க முடியாது.. அம்மாவின் அதிர்ச்சி செயல்!
ஸ்ரீதேவி
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.
தற்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர். கடைசியாக ஸ்ரீதேவி நடிப்பில் மாம் திரைப்படம் வெளியானது.
அதிர்ச்சி செயல்!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் குட்டி பத்மினி ஸ்ரீதேவி குறித்து பேசிய சில விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " ஸ்ரீதேவி புகழ் பெற்ற சமயத்தில், பல படங்களில் நடித்து லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். அப்போது, மகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடுவாரோ என்று அஞ்சிய அவரது தாய், ஸ்ரீதேவி மாலை நேரங்களில் அவர் வெளியே செல்வதைத் தடுக்க ஒயின் கொடுத்தார்.
கொஞ்சம் ஒயின் குடித்துவிட்டு, உடல் ஆரோக்கியத்திற்காக எட்டு மணிக்கே தூங்கிவிடு என்று கூறுவார். காலப்போக்கில், ஒயின் இல்லாமல் ஸ்ரீதேவியால் இருக்க முடியவில்லை. ஒயின் அவரது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறியது" என்று தெரிவித்துள்ளார்.