கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் வளைகாப்பு விழா- குவிந்த பிரபலங்கள், வீடியோ இதோ
ஸ்ரீதேவி அசோக்
தமிழில் பல சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக்.
புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அதன்பின் கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்தார்.
அப்படியே சீரியல்கள் பக்கம் வந்தவர் சன் டிவியில் செல்லமடி நீ எனக்கு, தங்கம், இளவரசி, கஸ்தூரி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம், கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி சீரியல்கள் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் பொன்னி, பிரிவோம் சந்திப்போம் தொடர்களில் நடித்து வருகிறார்.
வளைகாப்பு விழா
இவர் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது அசோக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு சித்தாரா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார், அழகிய புகைப்படங்களுடன் சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தார்கள்.
தற்போது ஸ்ரீதேவிக்கு கோலாகலமாக வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்துள்ளது. இதோ பிரபலம் வெளியிட்ட வீடியோ,