ஒல்லியாகி அடையாளம் தெரியாமல் மாறிய ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்! 10 வருடத்திற்கு முன் இப்படியா இருந்தார்?
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். 1996ல் அவர் ஸ்ரீதேவியை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார்.
2018ல் நடிகை ஸ்ரீதேவி துபாயில் அவரது ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது இறப்பு மீது பல சந்தேகங்கள் எழுந்தது. ஆனால் போலிஸ் விசாரணையில் ஸ்ரீதேவி இறந்தது ஒரு விபத்து தான் என உறுதியானது.
போனி கபூரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரிடம் lie detector டெஸ்டும் நடத்தப்பட்டது. அதன் பிறகு தான் போனி கபூர் எந்த தவறும் செய்யவில்லை என துபாய் போலீசார் விடுவித்தனர்.

ஒல்லியான போனி கபூர்
தயாரிப்பாளர் போனி கபூர் 10 வருடங்களுக்கு முன்பு மனைவி ஸ்ரீதேவி உடன் இருக்கும் போட்டோவையும் தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருப்பதையும் ஒப்பிட்டு ஒரு பதிவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri