கணவருடன் ஒரே அறையில் தங்க மறுத்த ஸ்ரீதேவி.. உண்மையை சொன்ன போனி கபூர்!
ஸ்ரீதேவி
இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்தார். சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் அங்கு உயிரிழந்தார்.
தற்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர். கடைசியாக ஸ்ரீதேவி நடிப்பில் மாம் திரைப்படம் வெளியானது.
ரகசியம்!
இந்நிலையில், மாம் படப்பிடிப்பின்போது நடந்தது குறித்து பேட்டி ஒன்றில் போனி கபூர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " ஸ்ரீதேவியின் சம்பளத்திற்காக ஒரு தொகையை நாங்கள் ஒதுக்கி வைத்திருந்தோம். ஸ்ரீதேவி அந்த மீதமுள்ள ரூ. 50-70 லட்சம் பணத்தை வாங்காமல் அதை ரஹ்மானுக்காக எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.
மாம் படத்தின் சூட்டிங் உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் எடுத்தோம். பின் ஜார்ஜியாவில் படம்மாக்கியபோது, என்னை அவருடைய அறையில் அனுமதிக்கவில்லை.
ஏனென்றால் கதாபாத்திரத்தின் கவனத்தை டிஸ்டர்ப் பண்ணும் என்பதால் என்னை ஸ்ரீதேவி, அவரின் அறையில் அனுமதிக்கவில்லை. அந்த ரோலில் அவர் கவனமாக இருந்ததால், படத்தில் அம்மாவின் கதாபாத்திரமாகவே இருக்க விரும்பினாள்" என்று தெரிவித்துள்ளார்.